இன்றைய கடுமையான வேலைவாய்ப்பு சந்தையில், டஜன் கணக்கான நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், கீன் என்ற நபர் தனக்கு வந்த வேலை நிராகரிப்பு மின்னஞ்சலுக்கு அளித்த வித்தியாசமான பதில் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

நிறுவனம் ஒன்று, “நாங்கள் வேறு நபரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம்” என்று அனுப்பிய வழக்கமான மின்னஞ்சலுக்கு, கீன் சற்றும் சோர்ந்து போகாமல் நகைச்சுவையுடன் ஒரு பதில் அனுப்பியுள்ளார். அதில், “உங்கள் நிராகரிப்பு மின்னஞ்சலை நான் பரிசீலித்தேன்.

ஆனால், இந்த ஆண்டில் நான் ஏற்கனவே பல நிராகரிப்பு கடிதங்களைப் பெற்றுவிட்டதால், ஆழமான ஆலோசனைக்குப் பிறகு உங்கள் நிராகரிப்பை தற்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முடிவு செய்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தானியங்கி தேர்வு முறைகளாலும், நீண்ட காலக் காத்திருப்புகளாலும் விரக்தியடைந்துள்ள உலகெங்கிலும் உள்ள வேலை தேடுபவர்கள் மத்தியில் இந்த இமெயில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் காட்டுத்தீயாய் பரவி வரும் வேளையில், நெட்டிசன்கள் பலரும் கீனின் இந்தத் துணிச்சலான பதிலை “200 IQ மூவ்” (200 IQ move) என்றும், கார்ப்பரேட் கலாச்சாரத்திற்கு அவர் கொடுத்த “யூனோ ரிவர்ஸ் கார்டு”  என்றும் பாராட்டி வருகின்றனர்.

“>

 

இந்தத் துணிச்சலான மற்றும் ஆக்கப்பூர்வமான பதிலுக்காகவே அவருக்கு அந்த வேலையைக் கொடுக்கலாம் என்றும், இனிமேல் தங்களுக்கும் வரும் நிராகரிப்பு கடிதங்களுக்கு இதே உத்தியைப் பயன்படுத்தப் போவதாகவும் பலர் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.