இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் என்பது அனைவரது வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதிக விலை உயர்ந்த ஃபோன்களை அனைவரும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு விலை உயர்ந்த மொபைல் போன்கள் தண்ணீரில் விழுந்தால் அதனை எப்படி பழைய நிலைமைக்கு மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நீங்கள் போனை சார்ஜில் போட்டு வைத்திருக்கும் போது தவறுதலாக தண்ணீரில் விழுந்து விட்டால் அல்லது வேறு பொருளுடன் தொடர்பில் இருந்தால் அதனை உடனடியாக டிஸ்கனெக்ட் செய்ய வேண்டும். இதன் மூலமாக மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

பிறகு மொபைல் போனை நன்றாக உலரக்கூடிய இடத்தில் உலர விட வேண்டும். உங்கள் கைகளால் போனை கீழ்நோக்கி மெதுவாக தட்டும் போது அதில் உள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிடும். நல்ல காற்றோட்டம் வரக்கூடிய இடத்தில் போனை வைக்க வேண்டும். இதனால் போனில் உள்ள நீர் ஆவியாகி வெளியே செல்லும். போனை ஒரு நாள் முழுவதும் உலர வைத்தால் அது மீண்டும் பழைய நிலைக்கு வர வாய்ப்புள்ளது. இவை செய்யும்போதும் உங்களுடைய போன் சரிவரவில்லை என்றால் நீங்கள் எந்த நிறுவனத்தின் போனை வாங்கியுள்ளீர்களோ அதே நிறுவனத்திடம் கொடுத்து சர்வீஸ் செய்து கொள்ளலாம்.