இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் அஞ்சலகத் திட்டத்திலேயே பணத்தை சேமித்து வருகிறார்கள். இதற்காக ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது பலரும் இணையும் ஒரு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு 7.1 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூபாய் 500 முதல் அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். 15 வருட முதிர்வு காலத்தில் ஆண்டுதோறும் ரூபாய் 1.5 லட்சம் செலுத்தி இருப்பின் முதலீடு ரூபாய் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதோடு வட்டி விகிதமும் சேர்த்து மொத்தம் உங்களுக்கு 40 லட்சத்து 68,29 கிடைக்கும்.