இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த நிலையில் உங்களுடைய செல்போன் பாஸ்வேர்டை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம். உங்கள் போனில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு சென்ற கூகுள் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்.

அதில் All Services என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யவும். Autofill ஆப்ஷனுக்கு சென்று Autofill With Google என்பதை தேர்வு செய்யவும். அதில் Preferences அப்ஷனை தேர்வு செய்யவும். அதில் Authenticate with biometrics before filling in passwords என்பதை தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் கணக்கை உங்களுக்கு தெரியாமல் யாராலும் திறக்க முடியாது.