
மெக்சிகோ சிட்டியில் இருந்து ஆஸ்டின், டெக்சாஸ் செல்லும் விமானத்தில் பயணித்த சேஸ் கேன்ஜெலோசி தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை ஒரு பெண் தவறாக எடுத்துக்கொண்டதை நேரில் கண்டார். அவர் “நான் எப் இருக்கையில் (F seat) இருக்க வேண்டும்” என அந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அவர் “நான் இங்கே உட்கார்வது வசதியாக இருக்கிறது” என பதிலளித்தார். எந்த விவாதத்துக்கும் இடமளிக்காமல், கேன்ஜெலோசி அருகிலிருந்த இடத்தில் அமர்ந்து விட்டார். ஆனால், சில நிமிடங்களுக்குள் அந்த பெண்ணின் இருக்கையில் இருக்கும் டிவி வேலை செய்யவில்லை. அதனால் அவர் மீண்டும் தனது உண்மையான இருக்கையை மாற்றிக் கொள்ள கேன்ஜெலோசியிடம் கேட்டார்.
ஆனால் இந்த முறை கேன்ஜெலோசி, “இல்லை, இப்போ எனக்கு இங்குதான் வசதியாக இருக்கு” என பதிலளித்து இருக்கையில் உட்கார்ந்து பாப்ஸ் பர்கர்ஸ் (Bob’s Burgers) கார்டூன் நிகழ்ச்சியை ரசித்தார். சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும், “விமான சீட் ஒதுக்கீடுகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை ஏன் சிலர் புரிந்து கொள்ள முடியவில்லை?” என கேள்வி எழுப்பினர். விமான ஊழியர்கள் மட்டுமே இருக்கை மாற்ற முடியும், பயணிகள் தங்களுக்கு விருப்பமான இடத்தில் உட்கார முடியாது என்று பலர் வலியுறுத்தினர்.