
போர்ன்விட்டா ஊட்டச்சத்து பானம் கிடையாது என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட ஆய்வில், ஊட்டச்சத்து பானங்கள் என்று சொல்லப்படுவதற்கான எந்த ஒரு வரையறையும் போர்ன்விட்டா போன்றவற்றில் இல்லை. அதனால் ஊட்டச்சத்து பானம் என்ற வரிசையில் இருந்து போர்ன்விட்டா போன்ற பானங்களை நீக்குமாறு அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.