தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மழை பெய்யும் சமயத்தில் மின்தடை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தற்போது மின்சார வாரியம் மின்தடை பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க போன் நம்பர் வெளியிட்டுள்ளது. அதன்படி மின் சேவைகள் மற்றும் தடை பிரச்சினைகள் குறித்து 24 மணி நேரமும் 94987 94987 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் கூறலாம்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக கன மழை கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மின்சார வாரியம் பொதுமக்கள் மின் சாதனைகளை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ‌