தமிழகத்தில் சமீப காலமாக உணவகங்களில் பழைய உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதால் தொடர்ந்து மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் உணவு தரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பல ஹோட்டல்களில் மாவட்ட நியமன அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தர மற்ற உணவுகளை வழங்குவதாக கூறி 572 உணவகங்கள் இதுவரை மூடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் தற்போது வரை ஒவ்வொரு ஹோட்டல்களிலும் திடீரென்று அதிரடி சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தாமாகவே உணவின் தரம் குறைவாக இருந்தால் நேரடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை சார்பாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பழைய உணவுகள் மற்றும் தரமற்ற உணவை வழங்கும் உணவகங்கள் குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு கால் செய்து அல்லது whatsapp மூலமாக நேரடி புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.