ரயில் நிலையங்கள் இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக மேம்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே கோட்ட மேலால் விஸ்வநாத் ஈரியா தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய இவர், இதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்,  நிஜான் மோட்டார் இந்தியா நிறுவனம் இணைந்து காஞ்சிபுரம், அம்பத்தூர் மற்றும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 15 ரயில் நிலையங்கள் என மொத்தமாக 17 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

ரயிலில் மாற்றுத்திறனாளிகளின் பெட்டிகள் மற்றும் இருக்கைகள் மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை கண்காணிப்பதற்கு அடுத்து ஒரு வாரத்துக்கு ரயில்களை சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் பெட்டி மற்றும் இருக்கைகளை சாதாரண பயணிகள் ஆக்கிரமிப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.