இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் அட்டையை மக்கள் சில நேரங்களில் கையோடு எடுத்துச் செல்ல மறந்து விடுகின்றனர். அந்த நேரத்தில் ஆதார் அட்டையை ஆன்லைன் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதற்கு UIDAI ஆதாரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய பல வழிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி முதலில் https://myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அதில் ஆதார் எண் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு 12 இலக்கு ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

பிறகு கேப்சா குறியீட்டை உள்ளிட்டு செண்ட் otp என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி உள்ளிட்டு சரி பார்க்க அல்லது பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்டதும் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட ஆதார் அட்டை pdf உங்களுக்கு வரும். இதில் உங்களுடைய ஆதார் அட்டையை பார்க்க உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களுடன் உங்கள் பிறந்த ஆண்டு yyyy வடிவத்தில் உள்ளிட வேண்டும்.