இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக வேலை நிமித்தம் காரணமாக வெளியூரில் குடியேறினால் கூட கட்டாயமாக அந்த முகவரியை ஆதார் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

அதாவது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டில் முகவரியை இலவசமாக அப்டேட் செய்யலாம். முகவரியை மாற்றம் செய்வதற்கு வங்கி பாஸ் புக்கை நீங்கள் பயன்படுத்தலாம். வங்கிக்குச் சென்று உங்களுடைய வங்கி கணக்கின் பாஸ்புக்கில் புதிய முகவரியை மாற்ற வேண்டும். அதன் மூலம் ஆதார் கார்டிலும் புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். மேலும் அப்டேட் செய்யும்போது வெரிஃபிகேஷன் கோடுகளை சரியாக பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய முகவரி மாற்றம் நிராகரிக்கப்படும்.