இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டையில் தனி நபரின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அதே சமயம் ஆதார் அட்டையுடன் மற்ற அனைத்து அடையாள ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆதார் அட்டையை வைத்து ஒரு தனி நபரின் அனைத்து விவரங்களையும் எளிதில் அரசு அறிந்து கொள்ள முடியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உங்களுடைய ஆதார் அட்டை எதிர்பாராத சூழலில் தொலைந்து விட்டால் பயப்பட வேண்டாம். அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.

அதாவது ஆதார் அட்டை தொலைந்து விட்டால் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து டூப்ளிகேட் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பெற்றுக் கொண்ட ஆதாரத்தை பிவிசி அட்டை வடிவத்தில் 50 ரூபாய் செலவில் மாற்றி பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்து பயன்படுத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.