கோவையில் தனியார் விடுதியில் தங்கிய கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி உரிமையாளர் ராஜ்குமார் என்ற நபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமார், விடுதியில் தங்கி உள்ள மாணவியை தனது காரில் கல்லூரிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை எதிர்பார்க்காத மாணவி அதிர்ச்சியில் தனது பெற்றோர்களிடம் இது குறித்து கண்ணீர் விட்டுக் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள், ராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பினார்கள். அவர் சரியாக பதில் அளிக்காததால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாணவியின் உறவினர்கள் ராஜ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பீளமேடு காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ராஜ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.