
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு, தளபதியின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில், இதில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்த வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சாம், சங்கீதா சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இதேபோன்று எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் அஜித் மற்றும் விஜயின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் மோதல் போக்கு நிலவியது. இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே நடக்கும் மோதல் போக்கு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் படங்களை படங்களாக பாருங்கள். உங்களுடைய ஹீரோக்களை கொண்டாடுங்கள். உங்களுடைய சண்டைகளை உடனடியாக நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Stop this man….
Just enjoy the movies for the movies and your heroes on screen…
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) January 19, 2023