
தர்மபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த சௌமியா அன்புமணி X தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில், நன்றி தர்மபுரி! பெருவாரியான வாக்குகளையும் பேரன்பையும் பொழிந்த தர்மபுரி மக்களுக்கு நன்றி. என் மீது நீங்கள் செலுத்தி அன்புக்கு என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். தர்மபுரி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் உங்கள் வீட்டு மகளாக என்றும் தொடர்வேன் என்று பதிவிட்டுள்ளார்.