
ஒவ்வொரு டெபிட் கார்டை போன்றே, RuPay டெபிட் கார்டுக்கும் வரம்பு இருக்கிறது. அதோடு வரம்புக்கு மேல் நீங்கள் பரிவர்த்தனை செய்தால் உங்களது பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். உங்களின் ரூபே டெபிட் கார்டில் வாங்குதல்கள் மற்றும் பணம் எடுப்பதற்குரிய அதிகபட்ச வரம்பை உங்களது வங்கி அமைக்கிறது.
ATM மற்றும் பிஓஎஸ் இயந்திர பரிவர்த்தனைகளுக்குரிய தினசரி பரிவர்த்தனை வரம்புகள் உங்களது வங்கியால் தீர்மானிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவை கார்டின் வகையை பொறுத்து மாறுபடலாம். இப்போது வங்கி அமைப்பு 4 வெவ்வேறு வகையான RuPay டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதாவது அரசு திட்டங்கள், கிளாசிக், பிளாட்டினம் மற்றும் செலெக்ட் ஆகும்.
ATM-கள் மற்றும் பிஓஎஸ் டெர்மினல்களுக்கான தினசரி பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் நீங்கள் இப்போது வைத்திருக்கும் RuPay டெபிட் கார்டு வகையின் அடிப்படையில் உங்களது வங்கியால் அமைக்கப்படும். அதன்படி ரூபே கார்டுகளுக்கான தினசரி ரொக்கம், பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் மற்றும் வருடாந்திர சந்தா கட்டணங்களும் வங்கிகளுக்கு இடையில் மாறுபடும்.