இந்தியாவின் ரேஷன் கடைகளில் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு தொடர்பான எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கறி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை உடனே இணைத்து விடுங்கள்.