
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார். அவர் உடல்நலக் குறைவினால் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வென்டிலேட்டர் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவருடைய உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு 75 வயதாகும் நிலையில் தற்போது அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.