ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேனகா நவநீதன் தேர்தல் அதிகாரியை சந்தித்து தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனக்கு மீண்டும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

அதன்பிறகு மேனகா நவநீதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் எந்த ஒரு அத்துமீறிய செயல்களிலும் ஈடுபடவில்லை. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கரி மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனை முதலில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று விடும் என்பதால் எதிர்கட்சிகள் செய்யும் சதி வேலைதான் இது என்று கூறினார்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அருந்ததியர் பற்றி சர்ச்சைக்குரிய வரையில் சீமான் பேசியதன் காரணமாக ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர் மேனகா நவநீதனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு 24 மணி நேரத்தில் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இல்லையெனில் சீமான் மற்றும் மேனகா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியுள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு ஈரோடு கிழக்கில் அடுத்தடுத்து சிக்கல்கள் வந்துள்ளது.