அதிமுக ஒற்றுமையை வலியுறுத்தி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் திடீரென பறிக்கப்பட்டது அதிமுகவிற்குள்ளே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுகவில் உள்ள உள்நிலை விவகாரங்கள் குறித்து பேசியிருந்ததற்காகவே அவரை நீக்கியதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனினும், இதுவரை இதுகுறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று இரவு ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவை பலர் உடைக்கவும், முடக்கவும் நினைக்கின்றனர். ஆனால் அது எந்த கொம்பனாலும் முடியாது” எனக் கூறியுள்ளார். இந்த பேச்சு, ஒருவிதமாக செங்கோட்டையனின் அண்மைய செயல்களுக்கு எதிரான மறைமுக பதிலடி என கட்சி ஊடகங்கள் கணிக்கின்றன. இதன்மூலம், கட்சியின் தற்காலிக உள்நிலை விரிசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
