தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இன்று தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். அதில், சோழிங்கநல்லூர் எல்கோசிஸ் வளாகத்தில் உலக தரத்தில் பசுமை பூங்கா இருபது கோடியில் அமைக்கப்படும்.

1.20 கோடியில் கூடுதலாக 100 புதிய சேவைகளை இ சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை வழங்கப்படும். 100 கோடி செலவினத்தில் இது வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 20000 அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு 184 கோடி வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.