இஸ்ரேல் மீது கமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. அதோடு லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் கமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று கூறியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் மீது டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அவரின் வீட்டை தொட்ட பகுதி பற்றி எரிகிறது. இது இரண்டாவது முறையாக இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. மேலும் தற்போது இஸ்ரேல் பிரதமர் வீட்டின் அருகே நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.