இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 15 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். இதனால் ஏரளமான பெண்கள் பயனடைந்தார்கள். இதில் பலருக்கும் கிடைக்கவில்லை . அதாவது ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களில் 55 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

அதில் இதுவரை வெறும் 9 லட்சம் பேர் மட்டுமே மேல்முறையீடு செய்துள்ளனர். அதாவது 46 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. சிலருக்கு தகுதி இருந்தும் மேல்முறையீடு செய்யப்போனால் அலைகழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, தகுதியானவர்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது