“டெல்லி மாளவியா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் போது, ஒட்டுமொத்தப் பகுதியும் கரும்புகையால் சூழ்ந்து மக்கள் அலறியடித்துக் கொண்டிருந்த தருணத்தில், அங்கிருந்த ஒரு மெத்தை கடைக்காரர் செய்த மனிதாபிமான காரியம் இணையவாசிகளின் நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.

தீயின் கொடூரம் தாங்காமல் கட்டிடத்தின் 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-வது மாடிகளில் இருந்து கீழே குதிக்கத் துடித்த மக்களைக் காப்பாற்ற, சற்றும் யோசிக்காத அந்த நபர், உடனடியாகத் தனது கடையில் இருந்த 20 முதல் 22 மெத்தைகளை (Mattresses) எடுத்து வந்து சாலையில் வரிசையாக அடுக்கி வைத்துள்ளார்.

மாடிகளில் இருந்து கீழே குதித்த மக்கள் இந்த மெத்தைகளின் மேல் பாதுகாப்பாக விழுந்ததால், 7 முதல் 8 பேரின் உயிர்கள் எவ்வித ஆபத்துமின்றி மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளன.

“>

 

தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே, சமயோசிதமாகச் செயல்பட்டு இத்தனை உயிர்களை மீட்டெடுத்த இந்த ‘நிஜ உலக சூப்பர் மேனை’ சமூக வலைதளங்களில் ஒட்டுமொத்த நாடும் கைகூப்பி பாராட்டி, சல்யூட் அடித்து வருகிறது.”