தமிழகத்தில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சம் மீட்டர்களும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களும் குறைபாடுகள் இருப்பதை மின்வாரியம் கண்டறிந்துள்ளது. இந்த மாதம் 12ஆம் தேதி வரை 56 ஆயிரத்து 565 பேர் தங்களின் அவகாசத்தை தாண்டி பத்து நாட்களுக்கு மேலாக 47.26 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளனர்.

எனவே அவர்களின் இணைப்புகளில் மின்விநியோகத்தை துண்டிப்பது மட்டுமல்லாமல் கட்டணத்தை விரைந்து வசூலிக்க வேண்டும் எனவும் மின்வாரிய முத்தரவிட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.