“இந்தியர்களின் உழைப்பிற்கு நிகர் யாருமில்லை” என உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை உருவாக்கிய முகமது அலப்பர் அவர்கள் இந்தியர்களின் பணி கலாச்சாரத்தை மனதாரப் பாராட்டியுள்ளார். எமிரேட்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியர்களின் கடமை உணர்வும், அர்ப்பணிப்பும் உலகிலேயே சிறந்தது என்று குறிப்பிட்டார்.
இது குறிப்பாக, நள்ளிரவு 1 மணிக்கு அழைத்தாலும், சோர்வின்றி அதற்குப் பதிலளித்து வேலையைத் தொடரும் இந்தியர்களின் குணம் தன்னை வியப்பில் ஆழ்த்துவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த அர்ப்பணிப்பு உணர்வே உலகளாவிய வளர்ச்சிக்கு இந்தியர்களை ஒரு முக்கிய சக்தியாக மாற்றியுள்ளது என்பதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மேலும் வெற்றிக்கான சூத்திரம் என்பது வெறும் நேரத்தைச் செலவிடுவது மட்டுமல்ல, கிடைக்கின்ற வாய்ப்புகளைச் சரியாக மதிப்பிட்டு, மிகுந்த ஒழுக்கத்துடன் செயல்படுவதே ஆகும் என்று அலப்பர் வலியுறுத்தினார். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இந்தியர்களின் ரத்தத்திலேயே ஊறியிருப்பதாகவும், அதுவே அவர்கள் உலக அரங்கில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள உதவுவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
