
குன்றத்துறையில் நடைபெற்ற கலைஞர் கைவினை திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, எந்த திட்டமாக இருந்தாலும் சமூக நீதியை சமத்துவத்தை நிலை நாட்டுவதாக இருக்க வேண்டும்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கானது அல்ல. சமூக நீதியை சம நீதியை நிலைநாட்டும் திட்டம் கலைஞர் கைவினை திட்டம் என கூறியுள்ளார். மேலும் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் இளைஞர்களை குலதொழிலில் தள்ளப் பார்க்கிறது பாஜக.
குலக்கல்வியை ஊக்குவிக்கும் இந்த திட்டத்தை நாங்கள் ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம். சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் கைவினை கலைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது தான் கலைஞர் கைவினை திட்டம் என கூறியுள்ளார்.