
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். பூவே உனக்காக என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய விஜய் அதன் பிறகு தான் நடித்த பல்வேறு படங்கள் மூலம் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய நடிப்பில் லியோ, தி கோட் போன்ற திரைப்படங்கள் கடைசியாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்கும் நிலையில் இந்த படத்திற்காக அவர் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. சினிமா புகழின் கேரியர் உச்சத்தில் இருக்கும் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் அதன் பிறகு முழு நேர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார். அவர் சினிமாவை விட்டு விலகுவது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் அவருடைய அரசியல் வருகையும் வரவேற்பை பெற்றுள்ளது.அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடும் நிலையில் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமைவார் என்று கூறப்படும் நிலையில் ஏற்கனவே கட்சி தொடங்கியதிலிருந்து திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்த அவர் பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ளார்.
திமுகவை விஜய் தொடர்ந்து விமர்சிக்கிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்பு ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த ஹீரோ பற்றி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலினிடம் அங்கிருப்பவர்கள் நீங்கள் சினிமா பார்ப்பீர்களா அப்படி பார்த்தால் உங்களுக்கு யாரை பிடிக்கும் எந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும் என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் தரமான படங்களாக இருந்தால் கண்டிப்பாக பார்ப்பேன். எனக்கு இளைஞர்களை கவரும் வகையில் தற்போது நடித்த வரக்கூடிய விஜயை ரொம்ப பிடிக்கும் என்று கூறுகிறார். மேலும் விஜய் திமுக வின்சிக்கும் நிலையில் ஸ்டாலின் தனக்கு விஜய் பிடித்தமான நடிகர்களில் ஒருவர் என்று கூறிய வீடியோ தற்போது வலைதளத்தில் மிகவும் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.
Power of thalapathy Vijay @actorvijay
pic.twitter.com/sQoW3DaksC
— Navanivijay (@NavaniNr47884) December 10, 2024