ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாட்டு தொழுவத்தில் பணியாற்றும் ராமேஸ்வர் வால்மீகி என்ற ஊழியரை மூன்று பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். ஊழியரின் கால்களை கயிற்றால் கட்டி படுக்க வைத்து கட்டை மற்றும் கம்பி ஆகியவற்றால் கண்மூடித்தனமாக அவரை தாக்கினர். அதுமட்டுமல்லாமல் அவரை தலைகீழாக தொங்கவிட்டு உள்ளங்காலில் சரமாரியாக தாக்கினர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர் என்ன குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கும் உரிமை நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.