சென்னை கொளத்தூர் தொகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 374 மாணவர்களுக்கு முதலமைச்சரின் மு க ஸ்டாலின் பரிசு வழங்கியுள்ளார்.

கல்வி உதவித்தொகை, பேனா, நோட்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய புத்தக பையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். மேலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 131 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இலவச மடிக்கணினிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடுத்துள்ளார்.