பல்லடத்தில் நடந்த நிகழ்வில், இலவச பஸ்சில் டிக்கெட் வாங்காத பெண்ணுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் – புளியம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் தெற்குபாளையம் பிரிவில் ஏறிய அந்த பெண், டிக்கெட் எடுக்காமல் இருந்தார். பஸ் ஸ்டாண்டில் இறங்கும்போது, டிக்கெட் பரிசோதகர் செந்தில்வேலன் அவரிடம் டிக்கெட் எடுக்காதது குறித்து கேட்டார்.

அதற்கு, “ஆண்கள் பகுதியிலேயே நடத்துனர் இருந்ததால், டிக்கெட் எடுப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது” என அந்த பெண் விளக்கம் அளித்தார். அதனை ஏற்றி கொள்ளாத பரிசோதகர்  விதிமுறைப்படி 200 ரூபாய் அபராதம் விதித்தார். பெண்ணிடம் ரொக்கமாக பணம் இல்லை என கூறியதனால், ‘ஜி பே’ எண்ணுக்கு பணத்தை அனுப்புமாறு பரிசோதகர் அறிவுறுத்தினார்.

அதன்படி, 200 ரூபாயை ஜி பே மூலமாக செலுத்திய பெண் அங்கிருந்து சென்றார். பின்னர், டிக்கெட் பரிசோதகர், பெண் வசூலித்த பணத்தை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தியதாகத் தெரிவித்தார். இந்த சம்பவம், இலவச பயணம் கூட விதிமுறைகளை மீறாமல் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.