இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆதார் அட்டையை பெற்ற அனைவரும் அதனை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி வரை இலவச சேவை வழங்கப்பட்டாலும் அப்போதிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சமீபத்தில் உதய் நிறுவனம் இலவச சேவைக்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த சேவை பிரத்தியேகமாக மை ஆதார் போர்டலில் கிடைக்கும். ஆதார் மையங்களுக்கு சென்றால் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பெயர் மற்றும் பிறந்த தேதி மற்றும் முகவரியை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.