இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 66 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் தடை செய்துள்ளது. ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரை மொத்தம் 66 லட்சத்து 11,700 கணக்குகள் தடை செய்யப்பட்டன. புகார்களை பொருட்படுத்தாமல் 24 லட்சத்து 34 ஆயிரத்து 200 கணக்குகள் முன்கூட்டியே தடை செய்யப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மறுப்புரம் ஜூன் மாதத்தில் 7893 புகார்கள் வந்துள்ளது.

இதில் 337 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பாலியல் குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Whatsapp மூலம் பணப்பறிப்பு சம்பவங்களும் அரங்கேறி வருவதால் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.