
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் சாலையின் ஓரமாக ஐஸ்கிரீம் விற்பவரை போலீசார் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஜஹாங்கீராபாத் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் ஹரிசிங், தனது போலீஸ் வாகனத்தில் வந்து, ஐஸ்கிரீம் விற்பவரிடம் இலவசமாக ஐஸ்கிரீம் கேட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் விற்பனை செய்பவர் இலவசமாக கொடுக்க மறுத்ததால் போலீஸ்காரர் கோபமடைந்து அங்கிருந்தவர்கள் முன்னிலையில் ஹரி சிங் லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
बुलंदशहर-फ्री आइसक्रीम न देने पर दरोगा ने पीटा, पिटाई का वीडियो सीसीटीवी में कैद
वीडियो में दिख रहे हैं SI हरि सिंह, थाना जहांगीराबाद कोतवाली क्षेत्र का मामला#Bulandshahr @bulandshahrpol @Uppolice pic.twitter.com/PHaX8VO0AC
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) May 19, 2025
அந்த வீடியோவில், விற்பவர் மன்னிப்பு கேட்டும், தப்பிச் செல்ல முயற்சித்தும், அந்த போலீஸ் அதிகாரி தொடர்ந்து தாக்குகிறார். இந்த சம்பவம் பெரும் கண்டனங்களை உருவாக்கியுள்ளது. உடனடியாக மாவட்ட மேற்பார்வையாளர் (SSP) நடவடிக்கை எடுத்து, ஹரிசிங்கை பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.