கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவான் என்னும் பகுதியில் யூ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15ஆம் தேதி தன்னுடைய காரில் தனது காதலனுடன்  சென்று கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து வந்த 4 கார்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யூ வின் காதலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதோடு யூ வுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. எனவே யூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தனது காதலனை இழந்த யூ மன வேதனையில் இருந்து வந்தார். தனது காதலனின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத யூ தனிமையில் இருந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து யூ தனது காதலரின் தாயை கவனித்துக் கொள்வதற்காகவும், இறந்த காதலனை நினைவு கூறும் விதமாகவும் யூ ஒரு முடிவு எடுத்தார். அதற்காக சீனாவில் உள்ள இறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளும் முறைப்படி தன்னுடைய காதலனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது .யூ வின் மனிதாபிமான செயலை சோசியல் மீடியாவில் பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இந்தப் பதிவில் ஒருவர் காதலனின் தாயை காப்பாற்ற நினைக்கும் இந்த துணிச்சலான பெண் மிகவும் திறமையானவர் என கூறியுள்ளார்.