பொதுவாகவே வங்கி கணக்கில் இருப்பு வைத்திருக்கும் ஒரு நபர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவருடைய ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பது தான் வழக்கமாக நடக்கும். ஆனால் இறந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து வங்கிக்கு தெரிவிக்காமல் நாம் இனி பணம் எடுத்தால் அது தவறுதான். இதில் பிடிபட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் விதிமுறையும் உள்ளது. உயிரிழந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தால் வங்கியின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதாவது ஒருவர் உயிரிழந்த பிறகு அவரின் சொத்துக்கள் அனைத்தையும் அவரது பெயருக்கு மாற்றிய பின்னர் தான் அவரது பணத்தை திரும்ப பெற முடியும். இது தொடர்பாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேசமயம் நாமினி ஒருவராக இருந்தால் அவர் இறந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகள் இருந்தால் நீங்கள் வங்கியில் ஒப்புதல் கடிதத்தை காட்டிய பிறகு இறந்தவரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.