பெண்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு பயனளிக்கும் ஒரு திட்டம்தான் மகிளா சம்மன்  திட்டம். இந்த திட்டம் மத்திய நிதி அமைச்சரால் 2023- 24-ம் ஆண்டு வெளியான பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் முதலீட்டு தொகைக்கு 7.5% வட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் வரவு வைக்கப்படும். இதில் அதிகபட்சமாக ஒருவர் 40% சதவீதம் தொகையை இடையில் எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. தற்போது இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் உள்ளது. அதேபோல தற்போது பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கணக்கு தொடங்கிய நபர் எதிர்பாராத விதமாக இறந்தால் அவருடைய பாதுகாவலருக்கு பணம் வழங்கப்படும்.