
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் 28 வயதுடைய இளம்பெண் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பேச ஆரம்பித்து நாளடைவில் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில் அருண் பிரகாஷ் ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். திடீரென அருண் பிரகாஷின் நடத்தை மீது இளம் பெண்ணுக்கு சந்தேகம் வந்ததால் அவரை கண்காணிக்க ஆரம்பித்தார்.
அப்போதுதான் அருள்பிரகாஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது. உடனே இளம்பெண் அருண் பிரகாஷ் உடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அருண் பிரகாஷ் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த அருண் பிரகாஷ் இளம் பெண்ணின் செல்போனை உடைத்து இரும்பு கம்பியால் அடித்து கொலை மிரட்டல் வைத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அருண் பிரகாஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.