
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சமீப காலமாக சரியான பார்மில் இல்லாமல் இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூட பழைய பந்துகளில் சிராஜின் பந்துவீச்சு சரி இல்லை என்று நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளார். அவர் சரியான பார்மில் இல்லாததால் இந்திய அணி அவரை எடுக்க தயங்கும் நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் அணி அவரை 12.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. இதன் காரணமாக அவர் இந்த ஐபிஎல் போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இதற்கிடையில் ஹிந்தி பிக் பாஸ் புகழ் நடிகை மகிரா சர்மாவுடன் சிராஜ் டேட்டிங் செய்வதாக ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை சிராஜ் ஏற்கனவே மறுத்த நிலையில் நடிகை மகிராவும் அதனை மறுத்துள்ளார். ஆனால் சிராஜ் அதனை உண்மை இல்லை என்று மறுத்த நிலையில் அந்த பதிவை அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய வலைதள பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். மேலும் இருவரும் டேட்டிங் செய்யவில்லை என்று கூறினாலும் அவர்களுடைய பதில் அதை உறுதி செய்யாத விதத்தில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.