தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் 39 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் பெயரில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியாகி உள்ளது பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 61,226, ஒய்யாரம் பன்னீர்செல்வம்- 269, மயிலாண்டி பன்னீர்செல்வம்- 521, ஒச்சப்பன் பன்னீர்செல்வம்- 680, ஒச்சாதேவர் பன்னீர்செல்வம்- 127 வாக்குகள் பெற்றுள்ளனர்.