பொதுவாகவே இரவு சாப்பாட்டை தாமதமாக சாப்பிடும் போது உடல் நல பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இரவு 7 மணி தொடங்கி 8 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தாமதமாக உணவு சாப்பிட்டால் அதிக எடை மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சாப்பாட்டை அந்தந்த வேலைகளில் சாப்பிடுவதால் எடை அதிகரிக்காமல் நோய் இல்லாமலும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இரவு சாப்பாட்டின் விளைவுகள்:

நாள் முழுவதும் இருக்கும் சோர்வு ,நேரத்திற்கு சாப்பிட்டு பழகிய பிறகு இருக்காது.

காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சி கிடைக்கும். சோர்வு மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் இருக்காது.

மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன் சுரப்பது சீரடையும். செரிமானம் சரியாக நடந்து இரவு முழுவதும் ஓய்வாக இருக்கும்.

அமில வீச்சு அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

இதய ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இரவு நேரத்தில் சீக்கிரமாக சாப்பிடுவதால் உடல் கொழுப்பு சேராது. இதனால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.