தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வலங்கைபுலி சமுத்திரம் கிராமம் உள்ளது. இங்கு மகேந்திரன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மகேஷ் (34) என்ற மனைவியும், 6 வயதில் சுதர்சன் என்ற மகனும், 2 வயதில் முகிலன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்படும் நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வழக்கம் போல் தகறாறு ஏற்பட்டது. இதில் மகேஷ் மிகவும் மன வேதனை அடைந்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார்.

அதனை  தன்னுடைய இரு மகன்களுக்கும் அவர் கொடுத்து விட்டார். இதில் குழந்தைகள் இருவரும் வலியில் அலறிய நிலையில் உடனடியாக அக்கம் பக்கத்தினர் மகேஷ்  மற்றும் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது மகேஷ் மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.