
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் என்ற பகுதி உள்ளது. இங்கு சம்பவ நாளில் இரவு 3:00 மணியளவில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு தான் கையில் வைத்திருந்த பெல்டால் அந்த பெண்ணின் கழுத்தை பிடித்து இழுத்தார். அதன் பிறகு அந்த பெண்ணை தரதரவனை இழுத்துச் சென்று ஒரு காருக்கு பின்னால் கொண்டு சென்றார். அந்தப் பெண் தப்பிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த நபர் விடவில்லை.
அவர் இரண்டு கார்களுக்கு நடுவில் அந்த பெண்ணை போட்டார். இதனால் அந்த பெண் சுயநினைவை இழந்த நிலையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதோடு இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த நபரின் புகைப்படம் ஒன்றிணையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.