
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் 40 வயது பெண் ஒருவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் . இந்த நிலையில் அந்த பெண்ணை மூத்த மனைவியின் வாரிசுகள் அடித்து துன்புறுத்தி உள்ளனர் . அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் வளர்ப்பு மகன் மற்றும் மருமகன் ஆகியோரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்கள்.
இதனை அவருடைய கணவரான ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.