மத்தியப்பிரதேசம் ஷிந்த்வாரா பகுதியில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது. இந்த நிகழ்வு மக்களின் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தில் நடந்த இந்த திருமணத்தை பார்ப்பதற்கு ஊர்மக்கள் அதிகளவில் கூடி இருந்தனர். திருமணம் முடிந்து ஹோம குண்டத்தை இரட்டை மணமக்கள் 7 முறை வலம் வந்தனர்.

இரட்டை சகோதரிகளான லதா, லட்சுமி ஆகிய இருவரும் இரட்டையர்களான அமன் மற்றும் ரிஷப்பை கரம் பிடித்துள்ளனர். அதாவது, லதா என்ற பெண் அமனையும், லட்சுமி என்ற பெண் ரிஷப்பையும் திருமணம் செய்துகொண்டனர். இந்த 2 ஜோடி மணமக்களும் பார்ப்பதற்கு கண்ணாடி பிம்பம் போல் இருந்ததாக  திருமணத்திற்கு வந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.