கொச்சியில் மறைந்த இயக்குனர் சித்திக் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார். சித்திக் சார் ஒரு மூத்த இயக்குனராக இருந்தவர், அவர் பிரெண்ட்ஸ் படத்தை உருவாக்கிய போது மிகவும் பாராட்டப்பட்டார். படப்பிடிப்பில் அவர் கோபமாகவோ அல்லது குரலை உயர்த்தியோ நான் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிந்தது நான் என்றென்றும் போற்றும் அனுபவம் என்று சூர்யா கூறினார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குனரான சித்திக் மாரடைப்பால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.சித்திக் தமிழில் இயக்கியிருந்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி உள்ளிட்டோர் நடித்துள்ளார்.