ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் என அனைவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.