சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் ஒரு லாரியின் பின்புறத்தில் நின்று கொண்டே நடனமாடும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண் மிகுந்த உற்சாகத்துடன் துள்ளித் துள்ளி நடனமாடுகிறாள், ஆனால் எதிர்பாராதவிதமாக  அந்த பெண் திடீரென தடுமாறி கீழே விழுந்துவிடுகிறார். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த காட்சியைக் கண்ட சமூக வலைதள பயனாளர்கள், முதலில் அதிர்ச்சி அடைந்தும் பின்னர் அந்த காட்சியின் இயற்கை நகைச்சுவையை உணர்ந்து சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளனர். இது குறித்து ஒரு பயனர் “வீடியோவை பல முறை பார்த்தேன்… எல்லா முறையிலும் சிரிப்பு வந்தது” என்ற வகையில்  கருத்து பதிவு செய்துள்ளார். கீழே  விழுந்த பெண்ணுக்குபெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கிறது.

 

இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது, எப்போது ஏற்பட்டது என தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், வீடியோவில் பதிவாகியுள்ள நடன உற்சாகமும், அதற்குப் பிறகு ஏற்பட்ட சின்னத் தடுமாற்றமும், இதனை ஒரு நகைச்சுவைச் சுழலில் மாற்றியிருக்கிறது. பலர் இந்த வீடியோவை “ஒரே சமயத்தில் வேதனையும் சிரிப்பும் தரும் வகையில் உள்ளது” எனக் கூறுகிறார்கள். மேலும் ரீல்ஸ் மோகத்தால் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளை எடுக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.