கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகரில் ரமேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவைத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரமேஷ் சென்னைக்கு வந்தார் அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ரமேஷ் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் ஒலக்கூர் ரயில் நிலையத்தை கடந்த போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.