மத்திய பிரதேச மாநிலத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுப்பதற்காக சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டதால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து லைக்ஸ்களை வாங்குவதற்காக பலர் வினோத முயற்சியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ரஞ்சனா என்ற பெண் ஸ்டண்ட் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் ரீல்ஸ் எடுப்பதற்காக சிலிண்டரை திறந்த போது வெளிச்சத்திற்காக மின்விளக்கின் சுவிட்சை ஆன் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரஞ்சனா, அவருக்கு உதவியாக இருந்த அணில் ஆகியோரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.